காத்திருந்த கட்சிகள்…கண்டுகொள்ளாத காங்கிரஸ்… :

By செய்திப்பிரிவு

தேர்தல் கூட்டணி என்றாலே அரசியல் கட்சிகளுக்கிடையே எதிர்பார்ப்புகளும் ஏமாற்றங்களும் தவிர்க்க முடியாதவை. ஆனால், அதன் விளைவுகளும் மறக்க முடியாத வகையில் அமைந்துவிடுவதுண்டு. 1967-ல் காங்கிரஸுடன் இணைந்து தேர்தலைச் சந்திக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் சோஷலிஸ்ட் கட்சியும் விரும்பின. காங்கிரஸ் முடிவுக்காக 1966 அக்டோபர் வரையில் காத்திருக்கவும் செய்தன. காமராஜருக்கு அந்தக் கூட்டணியில் விருப்பமில்லை. திமுக கூட்டணியில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடம் பெற்றிருந்ததால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனியாகத் தேர்தலைச் சந்தித்தது. 32 இடங்களில் போட்டியிட்டு 2 இடங்களில் மட்டுமே வென்றது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. பதிவான மொத்த வாக்குகளில் அக்கட்சிக்குக் கிடைத்த வாக்குகள் 1.8%. போட்டியிட்ட தொகுதிகளின் வாக்குகளில் இது 12.83%. பிரஜா சோஷலிஸ்ட் கட்சி திமுக கூட்டணியில் இடம்பெற்று 4 இடங்களை வென்றது. 174 இடங்களில் போட்டியிட்டு 137 தொகுதிகளை வென்று ஆட்சியைப் பிடித்த திமுக வாங்கிய வாக்குகள் மொத்த எண்ணிக்கையில் 40.69%. போட்டியிட்ட தொகுதிகளில் 54.32%. 232 தொகுதிகளில் போட்டியிட்டு 51 தொகுதிகளில் மட்டுமே வென்று ஆட்சியைத் தவறவிட்ட காங்கிரஸ் கட்சி மொத்த வாக்கு எண்ணிக்கை 41% பெற்றிருந்தாலும் தோல்வியைத் தழுவியது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்