`ஜனநாயகத் திருவிழா' பகுதியில், பொதுப் பள்ளிக்கான மாநில மேடை பொதுச் செயலாளர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திர பாபு கல்வி வளர்ச்சிக்குத் திட்டமிட தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கை வகுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியிருப்பது மிக முக்கியமானது. அரை நூற்றாண்டுக்கும் மேலாகக் கல்வியில் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு பணிகளையும் சீர்குலைக்கக்கூடிய கொள்கைகள், திட்டங்களின் ஆபத்திலிருந்து தமிழ்நாட்டுக் கல்வியைக் காப்பாற்ற வேண்டிய பெரும் பொறுப்பும் கடமையும் அரசியல் கட்சிகளுக்கு உள்ளன. ‘இந்து தமிழ்’ நாளிதழின் ஜனநாயகத் திருவிழா பகுதியில் முன்வைக்கும் ஆலோசனைகளை தமிழக அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் வாக்குறுதிகளில் உடனடியாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும். இது போன்ற மக்கள் நலனில் அக்கறை மிகுந்த துறைசார் வல்லுநர்கள், அறிஞர்கள் குரலுக்குச் செவிசாய்ப்பதுவும், கொள்கைகளில் சமரசமும் இல்லாததுமான அரசுதான் தமிழகத்துக்கு உடனடித் தேவை.
- ஸ்டாலின் சரவணன், புதுக்கோட்டை
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago