நான் வாக்களிக்கப்போகும் முதல் தேர்தல் இது. சமூக நலனுக்கான கடமையை ஆற்றப்போகும் நேர்மையான, துணிச்சல் மிக்க, கூர்நோக்குப் பார்வையுடைய, முக்கியமாக மற்றவரின் கைப்பாவை அல்லாத ஒரு வேட்பாளர், அதாவது நம்மில் ஒரு பிரதிநிதிக்கு என் உயரிய வாக்கை அளிக்க மிகுந்த ஆவலாக உள்ளேன். சமீபத்தில் வெளியான ஒரு செய்தி என்னை மலைக்க வைத்தது. நம் தமிழகத்தில் அரசு வேலைக்காக 63,63,122 பேர் ‘வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை’யில் பதிவுசெய்து காத்திருக்கின்றனர் என்ற செய்திதான் அது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் 24 வயது முதல் 35 வரையுள்ளவர்கள், அதாவது இளைஞர்கள் மட்டும் 22,78,107 பேர் பதிவுசெய்து காத்துக்கொண்டிருக்கிறார்களாம். நிலைமை இவ்வாறு இருக்க, நம் தமிழக அரசோ அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை 60 ஆக உயர்த்தி உத்தரவிட்டிருக்கிறது. இத்தனை லட்சம் இளைஞர்கள் வேலையின்றித் தவித்துக்கொண்டிருக்கையில், இப்போது இந்தப் பணி நீட்டிப்பு தேவை இல்லை என்பது என் கருத்து.
- ஆனந்தி வீரமுத்து, மீனாட்சி அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மதுரை.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago