ஓவிய அரங்குகள்
சென்னைப் புத்தகக்காட்சியில் பொதுவாகப் புத்தகங்கள்தான் அரங்குதோறும் காத்திருக்கும். பதிப்பகங்கள் அனைத்தும் இங்கு சங்கமித்திருப்பதைக் காணலாம். இந்த 44-வது சென்னைப் புத்தகக்காட்சியில் இரு அரங்குகள் காண்பவரை உள்ளே அழைக்கின்றன. முதலாவது, எழுத்தாளர் ஜெயந்தனின் மகன் சீராளன் அமைத்திருக்கும் ‘கோடு’ எனும் ஓவிய அரங்கு (அரங்கு எண் 159). அடிப்படையில் எழுத்தாளராகவும் நவீன ஓவியராகவும் இருக்கும் சீராளன் அமைத்துள்ள இந்த அரங்கில் ராமரின் தைல வண்ண ஓவியம், தாயுமானவனின் நீர் வண்ண ஓவியம், ரவியின் சிற்ப ஓவியங்கள் மற்றும் என்.கே.பாஸ்கரன், கோபிகிருஷ்ணன் ஆகியோரது ஓவியங்கள் காட்சிக்கும் விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளன. அடுத்தது, புத்தக்காட்சிக்குள் வந்த இந்திய யாளி. கலை இலக்கிய விமர்சகர் இந்திரனின் ‘யாளி’ கலைப் பண்பாட்டு மையம் அரங்கு எண் 47-ல் அமைந்துள்ளது. இந்த அரங்கில் இந்திரன் எழுதியுள்ள புத்தகங்களோடு ஓவியங்களும் விற்பனைக்குக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஓவியர்கள், எழுத்தாளர்கள், சிற்பிகள் ஒருங்கிணையும் இடமாகத் திகழ்கிறது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago