‘பள்ளித் தேர்வுகளை நடத்துவதன் சவால்கள் என்னென்ன?’ என்ற விவாதம் பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் பயனுள்ள வழிகாட்டுதலாக இருந்தது. மாணவர்களுக்குக் கல்வியைக் கொடுப்பதில் இந்த ஆண்டு பெரும் சவால் நிறைந்த ஆண்டாக மாறிப்போனது. மாணவர்கள் முழுமையாகத் தங்களைக் கற்றல் சூழலுக்கு ஏற்ப மாற்றிக்கொள்ள அவகாசம் இல்லாத சூழலில் உடனடியாகத் தேர்வு நடத்துவது என்பது மாணவர்களை மேலும் நெருக்கடிக்கு ஆளாக்கிவிடக் கூடாது. பள்ளித் தேர்வுகளை நடத்துவதில் அவசரம் காட்டுவதற்குப் பதிலாக, அலசி ஆராய்ந்து சரியான திட்டமிடலுடன் தேர்வுகளை நடத்துவதற்கான தயாரிப்புப் பணிகளைச் செய்தால்தான் மாணவர்களின் எதிர்காலம் சிறப்படையும்.
கூத்தப்பாடி பழனி, தர்மபுரி.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago