நூலகங்கள் முழு நாளும் இயங்க வேண்டும்!

By செய்திப்பிரிவு

நூலகங்கள் முழு நாளும் இயங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து எழுதப்பட்ட தலையங்கத்தைக் கண்டு அகமகிழ்ந்தேன். நான் நூலகம் சென்று செய்தித்தாள்கள், இதழ்களை வாசிக்கும் பழக்கம் உடையவன். கடந்த சில மாதங்களாக நூலகத்தைப் பயன்படுத்த முடியாமல் தவித்துவருகிறேன். என்னைப் போல ஏராளமானவர்கள் கிளை நூலகங்களை பயன்படுத்த முடியாமல் இருக்கின்றனர். அனைத்துத் துறைகளும் இயங்க ஆரம்பித்துவிட்ட இந்தச் சூழ்நிலையில் நூலகங்களையும் அரசாங்கம் கரோனா பிடியிலிருந்து விடுவிக்க வேண்டும். பொதுமக்களும் மாணவர்களும் வழக்கம்போல நூலகங்களைப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். புத்தகங்களை வாங்கிப் பதிப்பகங்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் அரசு புத்துயிர் தரவேண்டும்.

- ந.ஜெகதீசன், மின்னஞ்சல் வழியாக...

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்