சோமலெ குறித்து சுப. வீரபாண்டியன் எழுதிய கட்டுரை படித்தேன். சோமலெ, ஏ.கே.செட்டியார் ஆகிய இருவரும் தாங்கள் மேற்கொண்ட பயணங்களை நூல்களாகவும் கட்டுரைகளாகவும் தந்துள்ளவர்கள். தாம் சென்ற நாடுகளைப் பற்றி மிக விரிவாக எழுதியிருப்பார்கள். படிப்போர்க்கு அந்நாடுகளைச் சென்று பார்க்க வேண்டுமென்ற ஆவலைத் தூண்டும். நாட்டு வளங்களைக் கூறுவதுடன் அந்தந்த நாட்டு மக்களின் நடை, உடை, பாவனைகளையும் துல்லியமாக விளக்கியிருப்பார்கள். மிகச் சிறந்த பயண நூல்களைத் தமிழுக்குத் தந்த பெருமை அவர்களுக்கு உண்டு. ஆனால் எந்த புவியியல் ஆசிரியரும் இப்பயண நூல்களை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துவதில்லை. பயண நூல்களையும் பயண அனுபவங்களையும் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துவது அவசியம்.
- ச.சீ.இராஜகோபாலன், மூத்த கல்வியாளர், சென்னை
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago