மன்னர் காலத்திலிருந்து மக்களாட்சி வரை...

By செய்திப்பிரிவு

தங்க. ஜெயராமனின் ‘அரசுக்குக் குடிமராமத்தில் பிறந்த மோகம்' கட்டுரை படித்தேன். குடிமராமத்து மன்னர்கள் காலத்திலிருந்து மக்களாட்சி காலம் வரை நடைபெறும் திட்டமே. கிராம நீர்ப்பாசனம், நீர்மேலாண்மை போன்றவற்றைப் பெரும்பான்மை நில உடமையாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள் இணைந்து செய்ய வேண்டும். அரசின் பங்களிப்பு என்பது பொதுப்பணித் துறை மூலமாகப் பெரிய ஆறுகள், வாய்க்கால், மதகு போன்றவற்றைப் பராமரிப்பதே. ஆயக்கட்டுக்காரர்கள் குழு கிராம அளவில் அமைத்து உறுப்பினர்களின் நிதிப் பங்களிப்பும் அரசின் பெரும்பான்மை நிதிப் பங்களிப்பும் அவசியம். தொழில்நுட்பப் பங்களிப்பு பொதுப்பணித் துறையுடையது, நிர்வாகப் பங்களிப்பு மாவட்ட நிர்வாகத்துடையது, உடல் உழைப்பானது கட்டுரையாளர் குறிப்பிட்டவாறு பரப்பளவுக்குத் தகுந்தாற்போல் செய்யப்படுவது. குடிமராமத்து மூலமாக அரசே பணிகள் செய்தாலும் ஆயக்கட்டுக்காரர்கள் கண்காணிக்க வேண்டும்! ஆற்றில் கரையும் பணம் மக்களின் வரிப்பணம்.

- ப.தங்கராஜூ, மின்னஞ்சல் வழியாக...

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்