எஸ்.வி.ராஜதுரை எழுதிய ‘பேரறிவாளனுக்கு நீதி கிடைக்கட்டும்’ கட்டுரையைப் படித்தேன். பேரறிவாளனுக்கு மட்டுமல்ல; மீதியிருக்கும் ஆறு பேருக்குமே நீதி கிடைக்கட்டும் என்று எஸ்.வி.ராஜதுரை வலியுறுத்தியிருக்க வேண்டும். ராஜீவ் படுகொலையில் சம்பந்தப்பட்ட ஏழு பேருமே தங்களுடைய இளமையைப் பலியிட்டுத் தண்டனையை அனுபவித்துவிட்டார்கள். ஏழு பேருடைய துயரங்களும் பாடுகளும் ஒன்றுதான். ஆக, ஏழு பேரும் விடுவிக்கப்பட வேண்டும் என்ற உரத்த கோஷம்தான் நியாயமானது. இவர் உட்பட என்றில்லாமல் எழுவர் என்று பொதுவெளியில் பேசுங்கள். இந்தப் பிரச்சினையின் ஆரம்பக் கட்டத்திலிருந்து நெடுமாறன், வைகோ, எஸ்.துரைசாமி, நான் போன்ற பலர் எழுவர் மட்டுமல்ல; ராஜீவ் படுகொலையில் குற்றவாளிகளாக இருந்த அனைவரின் நியாயமான உரிமைகளுக்காகக் குரல் கொடுத்துவந்துள்ளோம் என்ற தகுதியின் அடிப்படையிலேயே சொல்கிறேன். திரும்பவும் சொல்கிறேன் எழுவரை விடுதலை செய்யுங்கள் என்ற கோஷத்தைப் பொதுவெளியில் வைப்போம். அதுதான் நேர்மையான நல்ல போக்கு.
- கே.எஸ்.இராதாகிருஷ்ணன், வழக்கறிஞர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago