கே.ஆர்.நாராயணன் குறித்த ஹரீஷ் காரேயின் கட்டுரை வாசித்தேன். நமது தேசத்தின் குடியரசுத் தலைவர் பொறுப்பு வகித்த அரிய மனிதர்களுள் முக்கியமான ஒருவரான அவரது நூற்றாண்டு எந்தக் கொண்டாட்டமும் இன்றி கடந்துகொண்டிருப்பது துரதிர்ஷ்டமானது. அதிகார பீடத்தில் இருப்போர் யாருடைய எதிரொலியாகவும் அவரது குரல் இல்லாதிருந்தது, ஒருவேளை காரணமாக இருக்கக் கூடும்.
ஒரு பதவியைச் சொந்த அலங்காரமாகக் கருதாமல், அதைப் பளுவாக உணராமல், அரசியல் சாசன சட்டத்தின் மீதான பிடிமானம், தேச விடுதலைக்காக அர்ப்பணித்துக்கொண்ட முன்னோடிகள் ஏந்திய லட்சியச் சுடர் மீதான மரியாதை போன்ற பண்பாக்கங்கள் கொண்டோரை அத்தனை எளிதில் சந்தித்துவிட முடியுமா இந்நாளில்? அமெரிக்க குடியரசுத் தலைவர் பில் கிளிண்டன் இந்தியா வந்திருக்கையில், கே.ஆர். நாராயணன், அவர் முன்னிலையில் ஆற்றிய உரையில் ‘உலகத்தை எந்த ஒற்றைத் தலைமையும் தனது விருப்பப்படி நிர்வகிக்கலாம் என்று நினைக்கவே கூடாது, உலகம் எனும் கிராமத்தை ஐ.நா. சபை போன்ற ஒரு பஞ்சாயத்துதான் வழிநடத்துகிறது, அதுதான் நவீன ஜனநாயகம்' என்று துணிந்து குறிப்பிட்டார்.
அரிய தலைவராகவும், எளிய மனிதராகவும் விளங்கிய உன்னத மனிதர் அவர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago