இந்து சமய அறநிலையத் துறை - இணை ஆணையர்கள் இடமாற்றம் :

By செய்திப்பிரிவு

இந்து சமய அறநிலையத் துறையில் பணியாற்றும் இணை ஆணையர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக, அறநிலையத்துறை செயலர் சந்திரமோகன் வெளியிட்ட அரசாணையில்,

‘‘இந்து சமய அறநிலையத்துறையில் பணிபுரிந்து வரும் திருநெல்வேலி இணை ஆணையர் எஸ்.செல்வராஜ், திருச்சி இணை ஆணையராகவும், திருச்சி இணைஆணையர் சுதர்சன், சென்னை ஆணையர் அலுவலகத்தில் உள்ளஇணை ஆணையராகவும் (திருப்பணி), சென்னை ஆணையர் அலுவலகம் (தலைமையிடம்) இணைஆணையர் கவிதா பிரியதர்ஷினி, திருநெல்வேலி இணை ஆணையராகவும், சிவகங்கை இணைஆணையர் தனபால், சென்னை-1இணை ஆணையராகவும் பணியிட மாறுதல் செய்யப்படுகின்றனர்.

சென்னை தலைமையிடம் இணை ஆணையர் (சரிபார்ப்பு) வான்மதி, ஆணையர் அலுவலகம்தலைமையிடம் இணை ஆணையராகவும், மதுரை மீனாட்சியம்மன் கோயில் இணை ஆணையர் செல்லதுரை, சிவகங்கை இணைஆணையராகவும் முழு கூடுதல்பொறுப்பில் நியமனம் செய்யப்படுகின்றனர்’’என்று கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்