மின்னணு முறையில் வாரிசு நியமிக்கலாம்: இபிஎஃப்ஓ அறிமுகம் :

By செய்திப்பிரிவு

தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனம் (இபிஎஃப்ஓ) மின்

னணு முறையில் வாரிசு பெயரைநியமிக்கும் (டிஜிட்டல் நாமினேஷன்) திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இ-சேவை மையங்கள் மூலம், மின்னணு முறையில்வாரிசு நியமனத்தை சந்தாதாரர்கள் சமர்ப்பிக்கலாம்.

மின்னணு முறையில் வாரிசுநியமனம் செய்வது தொடர்பாக அனைத்து நிறுவனங்களும், தங்களுடைய ஊழியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். இதற்குஉதவ குழு அமைக்கப்படும். நிறுவனங்கள் கேட்டுக் கொண்டால், இக்குழு அந்த நிறுவனங்களின் இருப்பிடத்துக்கு நேரில் சென்றுஉதவும். சந்தாதாரர்களுக்கு உதவ அலுவலக வளாகத்திலும் ஒரு குழு செயல்படும். சென்னை தெற்கு மண்டல தொழிலாளர் வருங்கால வைப்புநிதி ஆணையர் பி.ஹங்சிங் வெளியிட்ட செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்