காவல், சிறை, சீர்திருத்தப் பணிகள்மற்றும் தீயணைப்பு, மீட்புப் பணிகள் துறைகளில் காலியாக உள்ள11,813 இரண்டாம் நிலைக் காவலர்,இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர்களுக்கான பணியிடங்களை நிரப்பும் வகையில், பொதுத் தேர்வுக்கான அறிவிப்பு கடந்த ஆண்டு செப். 17-ம் தேதி வெளியிடப்பட்டது.
இத்தேர்வுக்கு 5.50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். இவர்களுக்கு கடந்த ஆண்டு டிச. 13-ம் தேதி எழுத்து தேர்வு நடத்தப்பட்டு, முடிவுகள் வெளியிடப்பட்டன.
உடல் தகுதி தேர்வுகள்
பின்னர், எழுத்து தேர்வில்தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு, உடற்கூறு அளத்தல், உடல் தகுதி தேர்வு மற்றும்உடல் திறன் போட்டிகள் நடத்தப்பட்டன.இதையடுத்து, 3,845 பேர்மாவட்ட, மாநகர ஆயுதப் படைக்கும், 6,545 பேர் தமிழ்நாடு சிறப்புகாவல் படைக்கும், 129 பேர்சிறை மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறைக்கும், 1,293 பேர்தீயணைப்பு, மீட்புப் பணிகள் துறைக்கும் தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மொத்தமாக 3,065 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் 3 பேர் உட்பட 11,812 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களது சேர்க்கை எண்கள் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழும இணையதளத்தில் www.tnusrbonline.org வெளியிடப்பட்டுள்ளது. அவர்களுக்கு பணிஆணை வழங்குவதற்கு முன்பு,மருத்துவப் பரிசோதனை மற்றும்முந்தைய பழக்க வழக்கங்கள்தொடர்பான காவல் விசாரணை அந்தந்த துறை மூலம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago