திமுக ஆட்சியில் இதுவரை - 109 ஒப்பந்தங்கள் மூலமாக ரூ.56,229 கோடி முதலீடு : 1.75 லட்சம் பேருக்கு வேலை என அரசு தகவல்

By செய்திப்பிரிவு

திமுக ஆட்சியில் தற்போது வரைதமிழகத்தில் புதிதாக தொழில் தொடங்க ரூ.56,229.54 கோடியில் 109 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட தகவல்:

2021-22 ஆண்டில் இதுவரை 109 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம், ரூ.56,229.54 கோடி முதலீடு பெறப்பட்டுள்ளது. இதன்மூலம், 1,74,999 பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். குறிப்பாக எரிசக்தி நிலையங்கள், மின்னணுவியல், மோட்டார் வாகன உதிரிபாகங்கள், தொழில் பூங்காக்கள், வான்வெளி மற்றும் பாதுகாப்பு, தகவல் தொழில்நுட்பம், சிமென்ட் உற்பத்தி, உணவு பதப்படுத்துதல், காலணிகள், மருந்துப் பொருட்கள், ஜவுளி போன்ற பல்வேறு துறைகளில் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சமச்சீரான வளர்ச்சியை உறுதி செய்யும் வகையில், இந்த முதலீடுகள் மாநிலம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் பரவலாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை 20-ல் 35 ஒப்பந்தங்கள் மூலம் ரூ.17,141 கோடி முதலீடு, அதன்மூலம் 55,054 பேருக்கு வேலைவாய்ப்பும், செப்.11-ல் ஓர் ஒப்பந்தம் மூலம் ரூ.2,000 கோடிமுதலீடு மற்றும் 4,000 பேருக்கு வேலைவாய்ப்பும், 22-ம் தேதி 14 ஒப்பந்தங்கள் மூலம் ரூ.1880.54 கோடி முதலீடு மற்றும் 39,150 பேருக்கு வேலைவாய்ப்பும், நவ.23 மாநாட்டில் 59 ஒப்பந்தங்கள் மூலம் ரூ.35,208 கோடி முதலீடு,76 795 பேருக்கு வேலைவாய்ப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்