நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு - அதிமுகவில் விருப்ப மனு விநியோகம் : இன்று முதல் நவ.29 வரை சமர்ப்பிக்கலாம்

By செய்திப்பிரிவு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில்அதிமுக சார்பில் போட்டியிடவிரும்புவோர் இன்று முதல்29-ம் தேதிவரை விருப்ப மனுக்களை அளிக்கலாம் என்று ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடக்க உள்ளது. இதில் அதிமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு கோருவோர், நவ.26-ம்தேதி (இன்று) முதல் 29-ம் தேதிவரை காலை 10 மணி முதல் மாலை5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம். சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்ட அதிமுக அலுவலகங்களில் உரிய கட்டணம் செலுத்தி விண்ணப்ப படிவங்களை பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம்.

மாநகராட்சி வார்டு உறுப்பினர்பதவிக்கான விண்ணப்பத்துக்கு ரூ.5 ஆயிரம், நகராட்சி வார்டுஉறுப்பினர் பதவிக்கு ரூ.2,500, பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர் பதவிக்கு ரூ.1,500 செலுத்த வேண்டும்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட வாய்ப்பு கோரி ஏற்கெனவே விருப்ப மனு அளித்தவர்கள் அதற்கான அசல் கட்டண ரசீதை வைத்திருந்தால், அதை சம்பந்தப்பட்ட மாவட்ட அதிமுக அலுவலகங்களில் சமர்ப்பித்து. கட்டணமின்றி விருப்ப மனு பெற்றுக் கொள்ளலாம்.

விருப்ப மனு பெறுவது தொடர்பான விவரங்களை, கட்சி உறுப்பினர்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் அதற்கானஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட மாவட்டச் செயலாளர்கள் செய்ய வேண்டும். கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றிவிருப்பமனுக்களை பெற வேண்டும்.

இவ்வாறு அறிவிப்பில் கூறப் பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்