போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தைக்கு விரைவில் குழு அமைப்பு :

By செய்திப்பிரிவு

தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில் 13-வது ஊதிய ஒப்பந்தம்முடிந்து 2 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இன்னும் 14-வது புதிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்தப்படவில்லை. இது போக்குவரத்து தொழிலாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், புதிய ஊதிய ஒப்பந்தம் குறித்து தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண விரைவில் பேச்சுவார்த்தைக்கான குழு அமைக்கப்படவுள்ளது.

இதுதொடர்பாக அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடம்கேட்டபோது, ‘‘போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்திட விரைவில் புதிய குழு அமைக்கப்படவுள்ளது. இதில், நிதித்துறை அதிகாரிகள், போக்குவரத்து கழகங்களின் நிர்வாக இயக்குநர்கள் உள்ளிட்டோர் இடம் பெறுவார்கள். இந்த குழு, தொழிற்சங்கங்களுடன் போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி, சுமூக தீர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்