தமிழகம் முழுவதும் நாளை 11-வது மெகா கரோனா தடுப்பூசி முகாம் நடக்கிறது.
தமிழகத்தில் ஞாயிறுதோறும் நடந்து வந்த மெகா கரோனா தடுப்பூசி முகாம், கடந்த வாரம் முதல் கூடுதலாக வியாழக்கிழமையும் நடத்தப்படுகிறது. இதுவரை 10 மெகா கரோனா தடுப்பூசி முகாம்கள் நடந்துள்ளன.
தமிழகத்தில் இதுவரை 76 சதவீதத்தினர் முதல் தவணை தடுப்பூசியும், 40 சதவீதத்தினர் 2 தவணை தடுப்பூசியையும் செலுத்திக் கொண்டுள்ளனர். இந்நிலையில், 11-ம் கட்ட மெகா கரோனா தடுப்பூசி முகாம் நாளை (நவ.25)நடக்கவுள்ளது. 2-ம் தவணை செலுத்தாமல் உள்ள 70 லட்சம்பேர் இந்த முகாமில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago