பேபி அணை பகுதியில் 15 மரங்களை வெட்ட அனுமதி - கேரள முதல்வருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் நன்றி :

பேபி அணைக்கு கீழ் உள்ள 15 மரங்களை வெட்ட அனுமதியளித்ததற்காக கேரள முதல்வருக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கேரள முதல்வர்பினராயி விஜயனுக்கு, அவர் நேற்று எழுதிய கடிதம்:

முல்லை பெரியாறு அணையில் உள்ள பேபி அணைக்கு கீழே உள்ள15 மரங்களை வெட்ட கேரள வனத்துறை அனுமதியளித்துள்ளது நீர்வளத் துறை அதிகாரிகள் மூலம்எனக்கு தகவல் கிடைத்துள்ளது. பேபி அணை, மண் அணையைவலுப்படுத்த இந்த நீண்டகால கோரிக்கை மிகவும் முக்கியமானது. இந்த கட்டமைப்புகளை வலுப்படுத்தும் நடவடிக்கையை தொடங்க இந்த அனுமதி எங்களுக்கு உதவும்.

இந்த அனுமதியை வழங்கியதற்காக கேரள அரசுக்கும், தங்களுக்கும், தமிழக அரசு, தென்மாவட்ட மக்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இது இரு மாநிலமக்களுக்கும் நீண்டகாலத்துக்கு பயனளிக்கும்.

முல்லை பெரியாறு அணையை மேலும் வலுப்படுத்தவும், அணையின் கீழ் பகுதியில் உள்ள கேரளாவில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் நாங்கள் உறுதியாக உள்ளோம். வண்டிப் பெரியாறு மற்றும் பெரியாறு அணைப் பகுதிகளுக்கு இடையே உள்ள சாலையை சீரமைக்கவும், பொருட்களை எடுத்துச்செல்வதற்கும் அனுமதி வழங்க வேண்டும். பழுதுபார்ப்பு மற்றும்வலுப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள தேவையான பொருட்கள் மற்றும் இயந்திரங்களை எடுத்துச் செல்ல இந்த சாலைப்பணிகள் மிகவும் அவசியம். நீண்டகாலமாக நிலுவையில் இருந்த மரங்களை வெட்டுவதற்கான அனுமதியை வழங்கிய தங்களுக்கும், கேரள அரசுக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி. இவ்வாறு அவர் தெரிவித்துள் ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்