பிரதமர் மோடியுடன் ஆளுநர் ரவி சந்திப்பு : தமிழகத்துக்கு தேவையான உதவிகளை அளிப்பதாக பிரதமர் உறுதி

பிரதமர் நரேந்திர மோடியை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சந்தித்த நிலையில், தமிழக நன்மைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அளிப்பதாக பிரதமர் உறுதியளித்துள்ளார்.

தமிழக ஆளுநராகப் பொறுப்பேற்ற பின் டெல்லி சென்ற ஆளுநர்ஆர்.என்.ரவி, குடியரசுத் தலைவர்ராம்நாத்கோவிந்த், துணைத்தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர்மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோரை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார்.

இந்நிலையில், சமீபத்தில் ஆளுநரைச் சந்தித்த முதல்வர் ஸ்டாலின், பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய நீட் தொடர்பான சட்ட மசோதாக்கள் குறித்து வலியுறுத்தினார். இதுதவிர, உள்ளாட்சித் தேர்தலில் முறைகேடுநடைபெற்றதாக, எதிர்க்கட்சித்தலைவர் கே.பழனிசாமியும் ஆளுநரை சந்தித்து மனு அளித்திருந்தார்.

இந்நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி, நேற்று முன்தினம் மாலைடெல்லி புறப்பட்டுச் சென்றார். தொடர்ந்து நேற்று மாலை அவர்பிரதமர் மோடியை சந்தித்தார். இந்த சந்திப்பு குறித்து ஆளுநர்மாளிகை வெளியிட்ட செய்திக்குறி்ப்பில், ‘‘பிரதமர் நரேந்திர மோடியை ஆளுநர் ஆர்.என்.ரவிசந்தித்து, தமிழகத்தின் வளர்ச்சி, தமிழக மக்களின் நலன் குறித்த பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதித்தார். அப்போது, பிரதமர்,தமிழக நன்மைக்கு தேவைப்படும் அனைத்துவிதமான உதவிகளையும் செய்வதாக ஆளுநரிடம் உறுதியளித்துள்ளார். தமிழகம் மற்றும் தமிழக மக்களின் வளர்ச்சி குறித்த பிரதமரின் ஆர்வத்துக்கு தனது நன்றியை ஆளுநர் தெரிவித்துக் கொண்டார்’’ என்று கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்