ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடர் - சிஎஸ்கே அணி 156 ரன் குவிப்பு :

கரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மே மாதம் பாதியில் நிறுத்தப்பட்டிருந்த ஐபிஎல் 14வது சீசன்போட்டிகள் துபாயில் நேற்று தொடங்கின. இதன் முதல் ஆட்டத்தில் மும்பை - சிஎஸ்கே மோதின.

டாஸ் வென்று முதலில் பேட் செய்த சிஎஸ்கே தடுமாறியது. டிரென்ட் போல்ட் பந்தில் டு பிளெஸ்ஸியும், ஆடம் மில்ன் ஓவரில் மொயின் அலியும் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். அம்பதி ராயுடு, ஆடம் மில்ன் வீசிய பந்தில் முழங்கையில் காயம் அடைந்து வெளியேறினார். சுரேஷ் ரெய்னா 4 ரன்னில் டிரென்ட் போல்ட் பந்தில்நடையை கட்டினார். 7 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்த நிலையில் களமிறங்கிய கேப்டன் தோனி (3), மில்ன் பந்தில் ஆட்டமிழந்தார்.

ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பாகவிளையாடி அரை சதம் அடித்தார். அவருக்கு உறுதுணையாக விளையாடிய ரவீந்திர ஜடேஜா 33 பந்துகளில் 26 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதிக்கட்ட ஓவரில் பிராவோ3 சிக்ஸர்களுடன் 24 ரன் விளாசிபும்ரா பந்தில் வெளியேறினார். பும்ரா வீசிய கடைசி ஓவரை ருதுராஜ் பதம் பார்க்க, 20 ஓவரில்சிஎஸ்கே 6 விக்கெட் இழப்புக்கு 156 ரன் எடுத்தது. ருதுராஜ் 58 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 88 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார்.

மும்பை அணி சார்பில் போல்ட்,பும்ரா, மில்ன் தலா 2 விக்கெட் கைப்பற்றினர். 157 ரன் இலக்குடன்மும்பை பேட்டிங் தொடங்கியது.

கொல்கத்தா - பெங்களூரு

இடம்: அபுதாபி

நேரம்: இரவு 7.30

நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE