மக்கள் சேவையில் தன்னலம் கருதாமல் செயல்பட்ட, சிறப்பாக புலன் விசாரணை செய்த காவல் துறை அதிகாரிகள் 15 பேருக்கு சுதந்திர தினத்தை முன்னிட்டு முதல்வரின் சிறப்பு பதக்கங்கள் வழங்கப்படுகின்றன.
மக்கள் சேவையில் தன்னலம் கருதாமல் சிறப்பாக செயல்பட்ட காவல்துறை அதிகாரிகள் 5 பேரின்பணியைப் பாராட்டி, சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறந்த பொதுச் சேவைக்கான தமிழக முதல்வரின் காவல் பதக்கம் வழங்கப்படுகிறது.
சென்னை தொழில்நுட்ப பிரிவுஏடிஜிபி அம்ரேஷ் புஜாரி, சென்னைசெயலாக்கப் பிரிவு ஏடிஜிபி அமல்ராஜ், சென்னை காவல் நுண்ணறிவுப் பிரிவு துணை ஆணையர் விமலா, திருச்சி கோட்டை போக்குவரத்து காவல் ஆய்வாளர் நாவுக்கரசன், சென்னை மத்திய குற்றப்பிரிவு காவலர் பிரேம் பிரசாத் ஆகிய5 பேர் சிறந்த பொதுச் சேவைக்கான முதல்வரின் காவல் பதக்கம் பெற தேர்வு பெற்றுள்ளனர்.
அதேபோல, புலன் விசாரணையில் சிறப்பாக செயல்பட்டதை அங்கீகரிக்கும் வகையில் முதல்வரின்காவல் புலன் விசாரணைக்கான சிறப்பு பணி பதக்கங்கள் 10 பேருக்கு வழங்கப்படுகின்றன.
புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் செல்வி, கன்னியாகுமரி குற்றப்பிரிவு ஆய்வாளர் சாந்தி, நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் ஆய்வாளர் ரவி, கன்னியாகுமரி நேசமணி நகர் ஆய்வாளர் சாயிலட்சுமி, ராமநாதபுரம் சத்திரக்குடி ஆய்வாளர் அமுதா, திண்டுக்கல் குற்றப்பிரிவு ஆய்வாளர் சந்தானலட்சுமி, கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் ஆய்வாளர் சீனிவாசன், கோவை ஆர்.எஸ்.புரம் ஆய்வாளர் கனகசபாபதி, தென்காசி ஆய்வாளர் ஆடிவேல், சேலம்உதவி ஆய்வாளர் ஆனந்தலட்சுமி ஆகியோர் தேர்வாகி உள்ளனர்.
15 பேருக்கும் தலா 8 கிராம் தங்கப் பதக்கமும், ரூ.25 ஆயிரம் ரொக்கப் பரிசும் வழங்கப்படும்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago