போடி தொகுதி அதிமுக எம்எல்ஏவும் முன்னாள் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வத்தின் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட தேர்தல் வழக்கில், தேர்தல் ஆணையம் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சமீபத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தேனி மாவட்டம்,போடிநாயக்கனூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஓ.பன்னீர்செல்வம், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளரான தங்க தமிழ்செல்வனை விட 11 ஆயிரத்து 21 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
இந்நிலையில் அதிமுக எம்எல்ஏஓ.பன்னீர்செல்வம் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக் கோரி அத்தொகுதி வாக்காளரான மிலானி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் குறைபாடுகள் உள்ளதாகவும், கடன் மதிப்பை குறைத்து காட்டியுள்ளதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி பி.பாரதிதாசன், இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் மற்றும் அதிமுக எம்எல்ஏவான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர், வரும் செப்.24-க்குள் பதிலளிக்கும்படி உத்தரவிட்டுள்ளார்.
உதயநிதி மீதான வழக்கு...
இதேபோல், சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி திமுக எம்எல்ஏ-வான உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்றதை எதிர்த்து, எம்.எல்.ரவி என்பவர் தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், உரிய நீதிமன்ற கட்டணம்செலுத்தாததால் தனது வழக்கைதிரும்பப்பெற எம்.எல்.ரவி அனுமதி கோரினார். இதுதொடர்பாகமனுதாக்கல் செய்ய மனுதாரருக்கு அறிவுறுத்திய நீதிபதி, அந்த வழக்கை 2 வாரங்களுக்கு தள்ளி வைத்துள்ளார்.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago