தமிழகத்தில் புதிதாக 1,933 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. முதியவர்கள் உட்பட 34 பேர் உயிரிழந்தனர்.
தமிழகத்தில் நேற்று ஆண்கள் 1,101, பெண்கள் 832 எனமொத்தம் 1,933 பேர் கரோனாவைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். ஆந்திரா, மேற்கு வங்கத்தில் இருந்து வந்த தலா ஒருவருக்கு தொற்று உறுதியானது.
அதிகபட்சமாக கோவையில் 236, சென்னையில் 211, ஈரோட்டில்177 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் 20,411 பேர் சிகிச்சையில் உள்ளனர். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் முதியவர்கள் உட்பட 34 பேர் நேற்று உயிரிழந்தனர். அதிகபட்சமாக சென்னை, கோவையில் தலா 5 பேர் இறந்துள்ளனர். கரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34,462 ஆக உயர்ந்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago