கிராமப்புற மக்கள் பயன்பெறும் வகையில் - சாதாரண கட்டண ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும் : ரயில்வே அமைச்சரிடம் எம்பிக்கள் கோரிக்கை

By செய்திப்பிரிவு

கிராமப்புற மக்கள் பயன்பெறும் வகையில் 3,715 சாதாரண கட்டண ரயில்களை இயக்க வேண்டும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவிடம் தமிழக எம்பிக்கள் சு.வெங்கடேசன், கலாநிதி வீராசாமி ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக ரயில்வே அமைச்சரிடம் அவர்கள் அளித் துள்ள கோரிக்கை மனு:

கரோனா தொற்று ஏற்பட்டவுடன் அறிவிக்கப்பட்ட பொது முடக்கத்தால் நாடு முழுவதும் 3,715 சாதாரண கட்டண ரயில்களின் சேவைகள் ரத்து செயயப்பட்டன. தற்போது கரோனா ஊரடங்கு தளர்வைத் தொடர்ந்து விரைவு ரயில்கள் சிறப்பு ரயில்களாகவும், புறநகர் மின்சார ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும், சாதாரண கட்டண ரயில்களின் சேவை இன்னும் தொடங்கவில்லை.

தற்போது கிராமப்புறங்களில் இருந்து வருவதற்கு ரயில்கள் இல்லாததால், பேருந்துகளில் நெரிசல் அதிகமாக உள்ளது. குறிப்பாக, கிராமம், நகர்புற பயணிகள்போதிய ரயில் சேவை கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். மொத்தரயில் பயணிகளின் எண்ணிக்கையில், சாதாரண கட்டண ரயில் பயணிகளின் எண்ணிக்கை 22 சதவீதமாகும். எனவே, இத்தகைய மக்கள் பயன்பெறும் வகையில் சாதாரண கட்டண ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும். அதுபோல், சீசன் டிக்கெட்களை வழங்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

இந்த கோரிக்கைகள் தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் உறுதியளித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்