கரூர் வைஸ்யா வங்கி (கேவிபி) ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் ரூ.109 கோடியை லாபமாக ஈட்டியுள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் வங்கி ஈட்டிய லாபம் ரூ.106 கோடியாகும். வங்கியின் மொத்த வர்த்தகம் 7.4 சதவீதம் அதிகரித்து ரூ.1,16,713 கோடியைத் தொட்டுள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் ஈட்டிய வர்த்தகத்தை விட ரூ.8,031 கோடி அதிகமாகும்.
வங்கி வழங்கும் கடன் அளவு 8 சதவீதம் அதிகரித்து ரூ.52,315 கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் வங்கி வழங்கிய கடன் அளவைக் காட்டிலும் ரூ.3,698 கோடி அதிகமாகும்.
நகைக்கடன் வழங்கும் அளவு 32.8 சதவீதம் அதிகரித்து ரூ. 13,206 கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டு இதேகாலத்தில் வழங்கியதைக் காட்டிலும் ரூ. 3,258 கோடி அதிகமாகும்.
வங்கியின் மொத்த சேமிப்பு ரூ.4,333 கோடி அதிகரித்துள்ளது. தற்போது 7 சதவீத வளர்ச்சியை எட்டியதன் மூலம் மொத்தம் திரட்டப்பட்ட சேமிப்பு அளவு ரூ. 64,398 கோடியாகும்.
வங்கியின் வாராக் கடன் அளவு 7.97 சதவீதம் குறைந்து ரூ.4,167 கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில்வங்கியின் வாராக் கடன் ரூ. 4,056 கோடியாக இருந்தது. நிகரவாராக் கடன் ரூ.1,845 கோடியாகும். முந்தைய ஆண்டு இதே காலத்தில் நிகர வாராக் கடன் ரூ.1,719 கோடியாக இருந்தது.வங்கி வட்டி மூலமாக ஈட்டும் வருமானம் 14 சதவீதம் அதிகரித்து ரூ.638 கோடி ஈட்டியுள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில்வங்கி ஈட்டிய வட்டி வருமானம் ரூ.562 கோடியாகும்.
காலாண்டு நிதி நிலை அறிக்கையை வங்கியின் தலைவரும் தலைமைச் செயல் அதிகாரியுமான பி.ரமேஷ் பாபு வெளியிட்டுள் ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago