வெப்பச் சலனத்தால் ஒருசில மாவட்டங்களில் - மிதமான மழை பெய்ய வாய்ப்பு :

By செய்திப்பிரிவு

வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில் ஒருசில மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் செய்தியாளர்களிடம் நேற்று கூறும்போது,

‘‘வடக்கு வங்கக்கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இதன் தாக்கத்தால் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு இல்லை.

தமிழகத்தில் 11-ம் தேதி (இன்று)பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும். வெப்பச் சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் லேசானதுமுதல் மிதமான மழை பெய்யக்கூடும். 12-ம் தேதி வெப்பச் சலனம்காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், ஒருசில உள் மாவட்டங்கள், கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

13, 14-ம் தேதிகளில் மேற்கண்டமாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானதுமுதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் வானம் தெளிவாகக் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 98 டிகிரி ஃபாரன்ஹீட்டை ஒட்டி பதிவாக வாய்ப்பு உள்ளது.

10-ம் தேதி காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டம் வால்பாறை, ஆழியாறில் 2 செ.மீமழை பதிவாகியுள்ளது’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்