உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க - ஓய்வூதியதாரர்களுக்கு விலக்கு :

ஒய்வூதியதாரர்கள் மற்றும் குடும்பஓய்வூதியதாரர்கள் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க விலக்கு அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

கரோனா வைரஸ் பரவல் மற்றும் ஊரடங்கால் ஓய்வூதியதாரர்கள் உயிர்வாழ் சான்றிதழை அவர்களிடம் இருந்து பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதை குறிப்பிட்டு, 2021-ம் ஆண்டு உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிப்பதில் இருந்து விலக்களிக்குமாறு கருவூலத் துறைஆணையரும், ஓய்வூதியதாரர்களும் தமிழக அரசுக்கு கோரிக்கைவிடுத்திருந்தனர். அதை ஆய்வு செய்து தற்போது நிலவும் கரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு சிறப்பினமாக 2021 ஆண்டுக்கு உயிர்வாழ் சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்கள் சமர்ப்பிப்பதில் இருந்து விலக்களித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதற்கான அரசாணையை நிதித் துறையின் கூடுதல் தலைமைச் செயலர் எஸ்.கிருஷ்ணன்வெளியிட்டுள்ளார். கடந்த ஆண்டும் கரோனா பாதிப்பை கருத்தில்கொண்டு உயிர்வாழ் சான்றிதழ்சமர்ப்பிப்பதில் இருந்து விலக்குஅளித்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE