3 நாட்கள் நடந்த போராட்டம் வாபஸ் தமிழகத்தில் அரசு பேருந்துகள் வழக்கம்போல இயக்கம்

By செய்திப்பிரிவு

போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டதை அடுத்து, தமிழகம் முழுவதும் அரசு பேருந்துகள் நேற்று காலை முதல் வழக்கம்போல இயங்கின.

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு புதிய ஊதிய ஒப்பந்தம்நிறைவேற்றுவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொமுச, சிஐடியூ, ஏஐடியூசி, ஐஎன்டியூசி உள்ளிட்ட 9 தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில்தமிழகம் முழுவதும் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம்கடந்த 25-ம் தேதி தொடங்கப்பட்டது. சென்னை உட்பட தமிழகம் முழுவதும் பெரும்பாலான அரசு பேருந்துகள் ஓடாததால் மக்கள் பெரிதும் அவதியடைந்தனர்.

3 நாட்களாக நடந்த இந்த போராட்டம் சென்னையில் நேற்று முன்தினம் நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு முடிவுக்கு வந்தது. இதையடுத்து, போக்குவரத்து தொழிலாளர்கள் நேற்று மீண்டும் பணிக்கு திரும்பினர். அதிகாலை முதலே அரசு பேருந்துகள் வழக்கம்போல இயங்கின.

இதுதொடர்பாக பயணிகள்சிலர் கூறியபோது, ‘‘போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தின்போது, ஆட்டோ, கால்டாக்ஸிகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது. அதனால் மிகவும் அவதியடைந்தோம். வரும்காலங்களில் வேலைநிறுத்தத்துக்கு வாய்ப்பின்றி, போக்குவரத்து தொழிலாளர்களை முன்கூட்டியே அழைத்து பேசி பிரச்சினைகளை தீர்க்க நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்