9, 10, 11-ம் வகுப்பு மாணவர்கள்தேர்வின்றி தேர்ச்சி செய்யப்படுவதற்கான அரசாணையை கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலர் தீரஜ்குமார் வெளியிட்ட அரசாணை:
கரோனா பரவல் சூழலை கருத்தில்கொண்டு நடப்பு கல்வி ஆண்டு (2020-21) 9, 10, 11-ம் வகுப்புமாணவர்கள் அனைவரும் முழுஆண்டு மற்றும் பொதுத்தேர்வுகள்ஏதுமின்றி தேர்ச்சி செய்யப்படுவதாக சட்டப்பேரவையில் 110 விதியின்கீழ் முதல்வர் பழனிசாமி பிப்.25-ம் தேதி அறிவிப்பு வெளி யிட்டார்.
முதல்வரின் உத்தரவை அமல்படுத்த அனுமதி கோரி பள்ளிக்கல்வி இயக்குநர் கருத்துரு வழங்கியுள்ளார். அதையேற்று நடப்புகல்வியாண்டு தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தின்கீழ் இயங்கும் அனைத்து விதமான அரசு,அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் 9, 10, 11-ம்வகுப்பு மாணவர்கள் முழு ஆண்டுமற்றும் பொதுத்தேர்வுகள் இல்லாமல் தேர்ச்சி செய்யப்படுகின்றனர்.
இதில் 10, 11-ம் வகுப்பு மாணவர்களின் பெயர்ப்பட்டியல் பள்ளிகளில் இருந்து பெறப்பட்டதன் அடிப்படையில் அவர்களுக்கு தேர்ச்சி சான்றிதழ் வழங்க தேர்வுத் துறைக்கு அறிவுறுத்தப்படுகிறது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago