2021-ம் ஆண்டுக்கான தொலைதூரக் கல்வி பி.எட். படிப்புக்கான மாணவர் சேர்க்கை வெகுவிரைவில் தொடங்கப்படும் என தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் பதிவாளர் கு.ரத்தினகுமார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தொலைதூரக்கல்வி வாயிலாக பிஎட் படிப்பை வழங்க தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்துக்கு யுஜிசியும், தொலைதூரக்கல்வி அமைப்பும் அனுமதி வழங்கியுள்ளன. இப்படிப்புக்கு தேசிய ஆசிரியர் பயிற்சி கவுன்சிலும் (என்சிடிஇ) அங்கீகாரம் அளித்துள்ளது. அதன்படி, இதற்கான மாணவர் சேர்க்கை பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடைபெறும். இதற்கான வகுப்புகள் மே மாதம் தொடங்கும். தமிழ்வழி பிஎட் படிப்பில் 500 பேரும், ஆங்கில வழி பிஎட் படிப்பில் 500 பேரும் (மொத்தம் 1,000 இடங்கள்) சேர்க்கப்பட உள்ளனர். படிப்புக்காலம் 2 ஆண்டுகள் ஆகும். கூடுதல் விவரங்கள் அறிய பல்கலைக்கழகத்தின் இணையதளத்தை (www.tnou.ac.in) தொடர்ந்து பார்த்துவருமாறு மாணவர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago