உறை பனியால் காஷ்மீரானது கொடைக்கானல்

By செய்திப்பிரிவு

கொடைக்கானல் மலைப்பகுதியில் வெப்பநிலை வெகுவாக குறைந்து இரவில் 6 டிகிரி செல்சியஸாக உள்ளதால் கடும் குளிர் நிலவுகிறது. அதிகாலையில் பச்சை புற்கள் மீது அடர்ந்த பனி படர்ந்து வெண்மை நிறமாக காஷ்மீர் போல் காட்சி அளிக்கிறது.

கொடைக்கானலில் இந்தஆண்டு வழக்கமான பனிக் காலத்தில் தொடர்ந்து மழை பெய்தது. இதனால் பிப்ரவரி முதல் வாரத்தில்உறைபனி தொடங்கிய நிலையில், ஒரு வாரத்துக்கு பிறகு பனியின் தாக்கம் குறைந்தது. இந்நிலையில், கடந்த 2நாட்களாக வெப்பநிலை வெகுவாகக் குறைந்து கடும் குளிர் நிலவி வருகிறது.

கொடைக்கானல் மேல்மலைப் பகுதிகளில் இரவில் குறைந்த பட்சமாக 6 டிகிரி செல்சியஸ் நிலவுகிறது.அதிகாலையில் உறைபனி படர்ந்து பசுமையான புல்வெளிகளில் வெண் பட்டு போர்த்தி காஷ்மீர் போலக் காட்சி தருகிறது. சுற்றுலாப் பயணிகள் கடும் குளிரைத் தாக்குப்பிடிக்க முடியாமல் ஒரு நாளிலேயே திரும்பி விடுகின்றனர்.

இதனால் கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வருகை வார விடுமுறை நாட்களில் வெகுவாக குறைந்து காணப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்