சென்னை ஐஐடியின் ‘சாரங்’ கலைவிழா நாளை தொடக்கம்

By செய்திப்பிரிவு

சென்னை ஐஐடியின் ‘சாரங்’கலைவிழா நாளை தொடங்குகிறது. கரோனா சூழல் காரணமாகமுதல்முறையாக இந்த ஆண்டு இணையவழியில் இவ்விழா நடத்தப்படுகிறது.

கல்லூரி மாணவர்களின் திறமைகள், படைப்பாற்றலை வளர்க்கும் நோக்கில் ‘சாரங்’ என்ற கலைவிழாவை சென்னை ஐஐடிஆண்டுதோறும் நடத்துகிறது.

அந்த வகையில், 26-ம் ஆண்டு‘சாரங்’ கலைவிழா நாளை (ஜன.4)முதல் 7-ம் தேதி நடக்கிறது. கரோனா காரணமாக இந்தஆண்டு இணையவழியில் நடத்தப்படுகிறது.

தொடக்க நாளில் கிளாசிக்கல் நைட், கர்நாட்டிக் 2.0 ஆகிய இசைநிகழ்ச்சிகள் நடக்கின்றன. அதைத்தொடர்ந்து கருத்தரங்க நிகழ்ச்சியில் செஸ் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த், இயக்குநர் கவுதம் மேனன், எழுத்தாளர் ராமச்சந்திர குஹா, பரதநாட்டியக் கலைஞர் லீலா சாம்சன் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

இந்நிகழ்ச்சிகளை இணையவழியில் காணலாம். கூடுதல் விவரங்களை www.saarang.org என்றஇணையதளத்தில் அறிந்துகொள்ளலாம். இத் தகவலை, ஐஐடி டீன் (மாணவர்கள் நலன்) நிலேஷ் ஜெ.வாசா, ஆலோசகர் (கலாச்சாரம்) அஷிண்டேர் ஆகியோர் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்