கூட்டுறவு தணிக்கைத் துறை, நிதித் துறைக்கு டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்யப்பட்ட தட்டச்சர்களுக்கு பணி நியமன ஆணைகளை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார்.
தமிழக அரசின் நிதித் துறை, கூட்டுறவு தணிக்கைத் துறையில் தட்டச்சர் பணியிடங்கள் காலியாக இருந்தன. இதையடுத்து காலி இடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வுநடத்தி, நிதித் துறைக்கு 32 தட்டச்சர்கள், கூட்டுறவு தணிக்கை துறைக்கு11 தட்டச்சர்கள் என மொத்தம் 43 பேரை தேர்வு செய்தது.
இவர்களுக்கு பணி நியமன ஆணைகளை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வழங்கினார். குறிப்பாக, நிதித் துறைக்கு தேர்வான 32 பேரில் 6 பேருக்கும், கூட்டுறவு தணிக்கைத் துறையில் தேர்வு செய்யப்பட்ட 11 பேரில் 7 பேருக்கும் பணி நியமன ஆணைகளை அவர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், நிதித் துறைசெயலர் ச.கிருஷ்ணன் மற்றும்கூட்டுறவு தணிக்கைத் துறை இயக்குநர் சி.மணிவாசகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago