தமிழகத்தில் கரோனா பாதிப்பு 8.25 லட்சத்தைக் கடந்தது இதுவரை 12,215 பேர் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் கரோனா தொற்று பாதிப்பு 8.25 லட்சத்தை கடந்துள்ளது. இளைஞர்கள் உட்பட 12,215 பேர் உயிரிழந்தனர்.

இதுதொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் நேற்று 443 ஆண்கள், 318 பெண்கள் என மொத்தம் 761 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக சென்னையில் 218 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 8 லட்சத்து 25,537 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை சென்னையில் 2 லட்சத்து 21,333 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 8 லட்சத்து 6,018 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் சென்னையில் 253 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 882 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். சென்னையில் 2,198 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 7,304 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அரசு மருத்துவமனைகளில் 2 முதியவர்கள், தனியார் மருத்துவமனைகளில் ஒரு இளைஞர் உட்பட 5 பேர் என நேற்று 7 பேர்உயிரிழந்தனர். அதிகபட்சமாக சென்னையில் 2 பேர் இறந்துள்ளனர். இதன்மூலம் கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12,215 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 4,044 பேர் இறந்துள்ளனர்.

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 2 லட்சத்து 27,575,கோவையில் 53,049, செங்கல்பட்டில் 50,515, திருவள்ளூரில் 42,995என்ற எண்ணிக்கையில் பாதிப்பு நிலவரம் உள்ளது. தமிழகத்தில் 247 அரசு மற்றும் தனியார் ஆய்வகங்களில் இதுவரை 1 கோடியே47 லட்சத்து 60,619 பரிசோதனைகள் நடைபெற்றுள்ளன. நேற்று மட்டும் 65,513 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்