புவனேஸ்வர்: ஆசியாவின் மிகப்பெரிய உவர்நீர் தடாகமான, ஒடிசாவில் உள்ள சிலிகா ஏரிக்கு இந்த குளிர்காலத்தில் 10.93 லட்சம் வெளிநாட்டு பறவைகள் வந்து சேர்ந்தன.
இதுகுறித்து ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இந்த ஆண்டில் சிலிகா ஏரிக்கு வந்த பறவைகளின் மொத்த எண்ணிக்கை 11,31,929 என கணக்கிடப்பட்டுள்ளது. இதில், 10.93 லட்சம் பறவைகள் வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்கு குளிர்காலத்தில் வந்தவையாகும். இந்த எண்ணிக்கை முந்தைய ஆண்டில் வந்த பறவைகளின் எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில் 5.4 சதவீதம் அதிகம்.
அதன்படி, கடந்த ஆண்டில் சிலிகா ஏரிக்கு 10.36 லட்சம் பறவைகள் வருகை தந்த நிலையில் இந்த ஆண்டில் 57,000 பறவைகள் கூடுதலாக புலம்பெயர்ந்து வந்துள்ளன.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago