இந்திய தனித்துவ அடையாள ஆணைய (யுஐடிஏஐ) தலைமை செயல் அதிகாரி சவுரவ் கர்க் கூறியிருப்பதாவது:
மத்திய அரசின் 300-க்கும் மேற்பட்ட திட்டங்களிலும் மாநில அரசுகளின் 400-க்கும் மேற்பட்ட திட்டங்களிலும் ஆதார் எண் இணைக்கப்பட்டிருக்கிறது. ஆதார் தரவுகள் முழுமையாக பாதுகாக்கப்படுகின்றன.
சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆதார் எண் திட்டம் தொடங்கப்பட்டது. நாடு முழுவதும் இதுவரை 131 கோடி பேருக்கு ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. அதாவது 99.7% மக்களுக்கு ஆதார் அட்டைகள் விநியோகிக்கப்பட்டிருக்கிறது. ஆதார் அட்டை திட்டத்தால் நேரடி மானியதிட்டங்களில் ரூ.2.25 லட்சம் கோடி சேமிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago