பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இந்தியா வெற்றி பெற்றதன் 50-ம் ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி ‘ஸ்வர்னிம் விஜய் மஷால்' (தங்க வெற்றி ஜோதி) ஏற்றப்பட்டது. இந்த ஜோதி பரம்வீர் சக்ரா, மகா வீர் சக்ரா ஆகிய விருது பெற்றவர்களின் கிராமங்கள், 1971-ல் பெரிய போர்கள் நடந்த பகுதிகளுக்கு கொண்டுசெல்லப்பட்டது. தமிழகத்துக்கும் இந்த ஜோதி கொண்டு வரப்பட்டது. பின்னர் இந்த ஜோதி மீண்டும் டெல்லி கொண்டு செல்லப்பட்டது. டெல்லியில் இன்று வெற்றி தினம் கொண்டாடப்பட உள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago