நடப்பு நிதி ஆண்டில் இந்தியா வின் வளர்ச்சி 10 சதவீதமாக இருக்கும் என்று கடந்த செப்டம்பர் மாதத்தில் ஏசியன் டெவலப்மென்ட் பேங்க் (ஏடிபி) கணிப்பு வெளியிட்டிருந்தது. தற்போது அதை 9.7 சதவீதமாக குறைத்துள்ளது.
விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடி காரணமாக, இந்திய நிறுவனங்கள் பாதிப்பைச் சந்தித்துள்ளன. அதன் தொடர்ச்சியாகவே, நடப்பு நிதி ஆண்டில்இந்தியாவின் வளர்ச்சி வீதம்முன்பு கணிக்கப்பட்டிருந்ததைவிட 0.3 சதவீதம் அளவில் குறையும் என்று ஏடிபி தெரிவித்துள்ளது.
2 முறை குறைப்பு
அந்த வகையில் கடந்த மூன்று மாதங்களில் இரண்டு முறை இந்தியாவின் வளர்ச்சி வீதம் தொடர்பான கணிப்பில் வளர்ச்சி வீதத்தை ஏடிபி குறைத்துள்ளது.முன்பு, நடப்பு நிதி ஆண்டின் முடிவில் இந்தியாவின் வளர்ச்சி 11 சதவீதமாக இருக்கும் என்று தெரிவித்திருந்தது. அதை செப்டம்பர் மாதத்தில் 10 சதவீதமாக குறைத்தது. கரோனா இரண்டாம் அலையின் காரணமாக இந்தியாவின் பொரு ளாதார வளர்ச்சி பாதிக்கப்படும் என்று அதற்கு காரணம் கூறியது.
செப்டம்பர் மாதம் வெளியிட்ட கணிப்பில் தென் ஆசியாவின் வளர்ச்சி 8.8 சதவீதமாக இருக்கும் என்று தெரிவித்திருந்தது. தற்போது அதை 8.6 சதவீதமாக குறைத்துள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago