மத்திய வெளியுறவு இணை அமைச்சர் நித்தியானந்த் ராய் மக்களவையில் நேற்று கேள்வி ஒன்றுக்கு அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:
கடந்த 7 ஆண்டுகளில் 8 லட்சத்து 81 ஆயிரத்து 254 இந்தியர்கள் தங்கள் இந்தியக் குடியுரிமையை கைவிட்டுள்ளனர். இந்த ஆண்டு மட்டும் செப்டம்பர் 20-ம் தேதி வரையில் 1,11,287 பேர் குடியுரிமையை கைவிட்டுள்ளனர். மேலும், வெளிநாடுகளைச் சேர்ந்த 10,645 பேர் இந்தியக் குடியுரிமை கோரி விண்ணப்பித்துள்ளனர்.
இவர்களில் பெரும்பாலானோர் பாகிஸ் தானைச் சேர்ந்தவர்கள். கடந்த 2016 முதல் 2020 வரையிலான காலத்தில் பாகிஸ்தானைச் சேர்ந்த 7,782 பேர், ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 795 பேர் இந்தியக் குடியுரிமைக்காக விண்ணப்பித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago