கரீனா கபூருக்கு கரோனா உறுதி: : கரண் ஜோகர் விருந்தில் பங்கேற்ற அனைவருக்கும் பரிசோதனை :

By செய்திப்பிரிவு

இந்தி திரைப்பட தயாரிப்பாளர் கரண் குமார் ஜோகர் கடந்த 8-ம் தேதி மும்பையில் உள்ள தனது வீட்டில் நண்பர்களுக்கு விருந்து கொடுத்தார்.

இந்த விருந்தில் பங்கேற்ற, நடிகரும் இயக்குநருமான சோகைல் கானின் மனைவி சீமா கானுக்கு முதலில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து விருந்தில் பங்கேற்ற நடிகைகள் கரீனா கபூர், அம்ரிதா அரோரா ஆகிய இருவரும் கடந்த ஞாயிற்றுக்கிழமை தாமாக முன்வந்து கரோனா பரிசோதனை செய்து கொண்டனர். இதில் இருவருக்கும் கரோனா தொற்று உறுதியானது. இதுதவிர நடிகை சஞ்சய் கபூரின் மனைவிக்கும் கரோனா தொற்று உறுதியானது.

இதையடுத்து விருந்தில் பங்கேற்ற அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்ய மும்பை மாநகராட்சி முடிவு செய்தது. இதில் விருந்து நடந்த அடுக்குமாடி கட்டிடத்தில் நேற்று கரோனா பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. இதில் கரண் ஜோகர், அவரது தாயார், அவரது ஊழியர்கள் 10 பேர் உட்பட 40 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இது தவிர விருந்தில் பங்கேற்ற அனைவருக்கும், கட்டாயம் கரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. விருந்தில் பங்கேற்ற நடிகைகள் கரிஷ்மா கபூர், மலைக்கா அரோரா உள்ளிட்டோருக்கும் கரோனா ஆபத்து ஏற்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்