ஆசிய படகு போட்டி: அர்விந்த் சிங்குக்கு தங்கப் பதக்கம் :

By செய்திப்பிரிவு

தாய்லாந்தின் பான்சாங் நகரில் ஆசிய படகு சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றன. இந்தப் போட்டியின் கடைசி நாளான நேற்று ஆடவருக்கான இலகுரக ஒற்றையர் ஸ்கல்ஸ் பிரிவில் இந்தியாவின் அர்விந்த் சிங் பந்தய தூரத்தை 7:55.942 விநாடிகளில் கடந்து முதலிடம் பிடித்து தங்க பதக்கம் வென்றார்.

அதேவேளையில் ஆடவருக்கான லையிட்வெயிட் டபுள் ஸ்கல்ஸ் பிரிவில் ஆஷிஸ் புகட்,சுக்ஜிந்தர் சிங் ஜோடி வெள்ளிப்பதக்கம் வென்றது. ஆடவருக்கான 4 பேர் கொண்ட ஸ்கல்ஸ் பிரிவில் பிட்டு சிங், ஜகர்கான், மன்ஜித் குமார், சுக்மீட் சிங் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி வெள்ளிப் பதக்கம் கைப்பற்றியது. இந்தத் தொடரை இந்தியா 2 தங்கம், 4 வெள்ளிப் பதக்கங்களுடன் நிறைவு செய்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்