உலகம் முழுவதும் பிரபல தலைவர்களின் ட்விட்டர் பக்கங்ககள் அடிக்கடி முடக்கப்படுகிறது (ஹேக்). கடந்த ஆண்டு செப்டம்பரில் பிரதமர் மோடியின் ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டது.
கடந்த ஜூலை மாதம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் உள்ளிட்டோரின் ட்விட்டர் பக்கங்கள் முடக்கப்பட்டன.
பிரதமர் நரேந்திர மோடிக்கு 2 ட்விட்டர் பக்கங்கள் உள்ளன. அரசு சார்ந்த ட்விட்டர் பக்கத்தை 4.54 கோடி பேரும், அவரது தனிப்பட்ட ட்விட்டர் பக்கத்தை 7.34 கோடி பேரும் பின்தொடர்கின்றனர்.
இந்த சூழலில் பிரதமர் மோடியின் தனிப்பட்ட ட்விட்டர் பக்கம் நேற்று முடக்கப்பட்டது. அவரது ட்விட்டர் பக்கத்தில், பிட்காயினை இந்திய அரசு அங்கீகரித்துவிட்டது. அரசு தரப்பில் 500 பிட்காயின் வாங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. இந்த பதிவை பலரும் பகிரத் தொடங்கினர்.
இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட விளக்கத்தில், "பிரதமரின் ட்விட்டர் பக்கம் சிறிது நேரம் முடக்கப்பட்டிருந்தது. இந்தவிவகாரம் ட்விட்டர் நிறுவனத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. உடனடியாக பிரதமரின் ட்விட்டர் பக்கம் செயல்பாட்டுக்கு வந்தது. முடக்கப்பட்ட நேரத்தில் பதிவிடப்பட்ட தகவல்களை நம்பவேண்டாம்" என தெரிவிக்கப்பட் டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago