நாட்டின் அரசியலமைப்பு சபை பற்றி இளைஞர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் : பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தல்

நம் நாட்டுக்கென தனியாக அரசியலமைப்பு சட்ட வரைவை உரு வாக்குவதற்காக அரசியலமைப்பு சபை உருவாக்கப்பட்டது.

இந்த சபை கடந்த 1946-ம் ஆண்டு டிசம்பர் 9-ம் தேதி முதல் முறையாக கூடியது. இந்த சபையின் தற்காலிக தலைவராக மூத்த உறுப்பினர் டாக்டர் சச்சிதானந்த சின்ஹா தேர்ந்தெடுக்கப்பட்டார். அரசியலமைப்பு சபை முதல் முறையாக கூடி நேற்றுடன் 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “கடந்த 75 ஆண்டுகளுக்கு முன்புஇதே நாளில் நமது அரசியலமைப்பு சபை முதல் முறையாக கூடியது. நாட்டின் பல்வேறு பகுதிகள், பின்னணி மற்றும் சித்தாந்தங்களைக் கொண்டவர்கள் அரசியலமைப்பு சட்ட வரைவை உருவாக்கவேண்டும் என்ற நோக்கத்துக்காக ஒன்று கூடினர். அவர்களுக்கு மரியாதை செலுத்துகிறேன்.

நமது அரசியலமைப்பு சபையின்வரலாற்று சிறப்பு மிக்க முதல் அமர்வு நடைபெற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், சபையின் முதல் கூட்டம் மற்றும் அதன் நடவடிக்கைகள் பற்றியும் அதில் பங்கேற்ற முக்கிய பிரமுகர்களைப் பற்றியும் இளைஞர்கள் தெரிந்துகொள்ள வேண்டும்” என பதிவிட்டுள்ளார். - பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்