இந்திய மென்பொருள் சேவைத் துறையில் முதலீடு, 2021-ம் ஆண்டில் 450 கோடி டாலராக உயர்ந்துள்ளது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 170 சதவீதம் அதிகமாகும். ஆலோசனை நிறுவனமான பெயின் அண்ட் கம்பெனி நடத்திய ஆய்வில், 2025-ம்ஆண்டில் இந்திய நிறுவனங்களின் பங்களிப்பு சர்வதேச சந்தையில் 8% முதல் 9% அளவுக்கு அதிகரிக்கும் என்று தெரியவந்துள்ளது.
தொழில்நுட்ப நிறுவனங்களின் அடுத்தகட்ட புரட்சி குறித்து, இந்நிறுவன ஆய்வறிக்கையில் இந்தியநிறுவனங்கள் மிக விரைவாக அதேசமயம் அதிக முதலீடுகளை ஈர்க்கும் துறையாக வளர்ந்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சாஃப்ட்வேர் சேவைத் துறையில் கூட்டு தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு, மனிதவள தொழில்நுட்பம் ஆகியவற்றில் அதிக முதலீடுகள் இருக்கும் என்றும் தெரியவந்துள்ளது.
கல்வி தொழில்நுட்பம், சுகாதாரம், போக்குவரத்து, இ-காமர்ஸ்,சைபர் பாதுகாப்பு, சாஃப்ட்வேர் மேம்பாடு உள்ளிட்ட துறைகள் இப்போது வளர்ந்து வரும்துறைகளாக கண்டறியப்பட்டுள்ளன.
இந்தியாவில் தற்போது சாஃப்ட்வேர் துறையில் புதிய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் வளர்ந்து வருகின்றன. இவற்றில் 7 முதல் 9 நிறுவனங்களின் ஆண்டு வர்த்தகம் 10 கோடி டாலருக்கும் அதிகமாக உள்ளது. இவை அனைத்தும் தங்கள் கூட்டாளியான அமெரிக்க நிறுவனங்களை விடசிறப்பாக செயல்படுவதாக ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்தியாவில் அதிகரித்து வரும் பொறியியல் மாணவர்களின் எண்ணிக்கை, இணையதள வசதி ஆகியவற்றுடன் இத்துறைக்கு அரசு அளித்துவரும் ஊக்குவிப்பும் இத்துறை அதிக முதலீடுகளை ஈர்க்கும் துறையாக வளரும் என குறிப்பிடப்பட்டுள்ளது.- பிடிஐ
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago