ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான புகழ்வாய்ந்த ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 147 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
பிரிஸ்பனில் நேற்று தொடங்கிய இந்த டெஸ்டில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக இருந்தது. மிட்செல் ஸ்டார்க் வீசிய முதல் பந்திலேயே ரோரி பர்ன்ஸ் ரன் ஏதும் எடுக்காமல் போல்டானார். டேவிட் மலான் 6, கேப்டன் ஜோ ரூட் 0 ரன்களில் ஜோஸ் ஹேசல்வுட் பந்திலும் பென் ஸ்டோக்ஸ் (5), ஹசீப் ஹமீது (25) ஆகியோர் பாட் கம்மின்ஸ் பந்திலும் ஆட்டமிழந்தனர். ஜாஸ் பட்லர் 39, ஆலி போப் 35 ரன்களில் முறையே மிட்செல் ஸ்டார்க், கேமரூன் கிரீன் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தனர்.
கிறிஸ் வோக்ஸ் (21), ஆலிவ் ராபின்சன் (0), மார்க்வுட் (8) ஆகியோரை பாட் கம்மின்ஸ் வெளியேற்ற இங்கிலாந்து அணி 50.1 ஓவரில் 147 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பாட் கம்மின்ஸ் 5 விக்கெட்களை வீழ்த்தினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago