பொதுப்பங்கு வெளியீடுகளில் டிஜிட்டல் (யுபிஐ) மூலமாக மேற்கொள்ளப்படும் முதலீட்டு உச்சவரம்பு ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. தற்போது இந்த வரம்பு ரூ.2 லட்சமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
பொதுப் பங்குகளில் முதலீடு மேற்கொள்வதில் மிகச் சிறந்த முறையாக யுபிஐ கருதப்படுகிறது. கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதியிலிருந்து யுபிஐ மூலமாக பங்குகளில் முதலீடு செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பொதுப் பங்கு வெளியீடுகளில் ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை முதலீடு செய்வோரின் அளவு 10 சதவீத அளவுக்கு உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு யுபிஐ பரிவர்த்தனை வரம்பு உயர்த்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago