அந்நிய செலாவணி கையிருப்பில் இந்தியா 4-ம் இடம் :

By செய்திப்பிரிவு

அந்நிய செலாவணி தொடர்பான கேள்விக்கு மத்திய நிதித் துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி நேற்று மக்களவையில் கூறியதாவது.

கடந்த நவம்பர் 19-ம் தேதி நிலவரப்படி இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு 640.4 பில்லியன் டாலராக உள்ளது. அந்நிய செலாவணி கையிருப்பை அதிகம் கொண்டிருக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 4-ம்இடத்தில் உள்ளது. சீனா, ஜப்பான்சுவிட்சர்லாந்து ஆகியவை முதல் 3 இடங்களில் உள்ளன.

2014-15 முதல் 2020-21 வரையிலான ஏழு ஆண்டுகளில் பெட்ரோலியப் பொருட்கள் மூலம் ரூ.16.7 லட்சம் கோடி கலால் வரி பெறப்பட்டுள்ளது. 2013-14-ல் பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.9.2, டீசலுக்கு ரூ.3.46 ஆக இருந்தது. தற்போது இது முறையே ரூ.27.9,ரூ.21.80 ஆக உள்ளது என அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்