டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை 4 ஆண்டில் 70 மடங்கு உயர்வு : எஸ்பிஐ ஆய்வறிக்கையில் தகவல்

By செய்திப்பிரிவு

கடந்த 4 ஆண்டுகளில் டிஜிட்டல்(யுபிஐ) மூலமான பணப் பரிவர்த்தனை 70 மடங்கு அதிகரித்து இருப்பது தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக எஸ்பிஐவெளியிட்டுள்ள ஆய்வறிக்கை யில் கூறியிருப்பதாவது:

நேரடிப் பணப் பரிவர்த்தனை பாதியாக குறைந்துள்ளது. சென்ற ஆண்டு ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலகட்டத்தில் நேரடி பணப் பரிவர்த்தனை ரூ.3.2 லட்சம் கோடியாக இருந்தது. இந்த ஆண்டில் ஏப்ரல் முதல் நவம்பர் வரையில் நேரடி பணப் பரிவர்த்தனை ரூ.1.3 லட்சம் கோடியாக குறைந்துள்ளது. அதேபோல், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு மூலமான பரிவர்த்தனையும் தொடர்ச்சியாக குறைந்து வருகிறது. அந்த வகையில் 2017-க்குப் பிறகான 4 ஆண்டுகளில் யுபிஐ பரிவர்த்தனை 70 மடங்கு அதிகரித்துள்ளது.

இவ்வாண்டின் தீபாவளி பண்டிகையையொட்டி மக்களின்நுகர்வு ரூ.1.25 லட்சம் கோடியாகஇருந்தபோதிலும், பணச்சுற்று அதிகரிக்கவில்லை.

பெரும்பாலான பரிவர்த்தனை யுபிஐ மூலம் நடந்துள்ளது. அக்டோபர் மாதத்தில் மட்டும் 421 கோடி யுபிஐ பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன. அவற்றின் மொத்த மதிப்பு ரூ.7.71 லட்சம் கோடி ஆகும். நவம்பரில் 418 கோடி யுபிஐ பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவற்றின் மொத்த மதிப்பு ரூ.7.68 லட்சம் கோடி ஆகும். நவம்பர் மாதத்தில் தினமும் யுபிஐ மூலமாக 13 கோடி பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன. அவற்றின் மதிப்பு ரூ.25,000 கோடி ஆகும்.

மற்ற பரிவர்த்தனை முறைகளைவிட யுபிஐ பரிவர்த்தனை மிக எளிமையாக உள்ளதால் அதனை நோக்கி மக்கள் அதிகஎண்ணிக்கையில் நகர்ந்து வரு கின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. - பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்