பிடபிள்யூஎஃப் உலக டூர் பைனல்ஸ் தொடரில் இந்தியாவின் பி.வி.சிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.
இந்தோனேஷியாவின் பாலியில் நடைபெற்ற இந்தத் தொடரில்மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் உலக சாம்பியனும் ஒலிம்பிக்கில் இரு முறை பதக்கம்வென்றவருமான இந்தியாவின் பி.வி.சிந்து, உலகத் தரவரிசையில் 6வது இடத்தில் உள்ள கொரியாவின் அன் சேயங்கை எதிர்த்து விளையாடினார். 40 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சிந்து 16-21, 12-21 என்ற நேர் செட்டில் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கம் பெற்றார்.
அன் சேயங்கிடம் சிந்து தொடர்ச்சியாக 3வது முறையாக அதிலும் நேர் செட்டில் தோல்வி கண்டுள்ளார். தற்போதைய வெற்றியின் மூலம் மகளிர் பிரிவில் உலக டூர் பைனல்ஸ் தொடரில் தங்கப் பதக்கம் வென்ற முதல் கொரியா வீராங்கனை என்ற பெருமையை பெற்றார் அன் சேயங். அதேவேளையில் பாலியில் தொடர்ச்சியாக 3 பட்டங்களை வென்று அசத்தியுள்ளார் அன் சேயங். கடந்தஇரு வாரங்களில் அவர், இந்தோனேஷியா மாஸ்டர்ஸ், இந்தோனேஷியா ஒபன் தொடர்களிலும் பட்டம் வென்றிருந்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago