ஒமைக்ரான் தொற்று அச்சுறுத்த லுக்கு இடையே இந்திய கிரிக்கெட் அணியின் தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தை உறுதி செய் துள்ளது பிசிசிஐ. எனினும் ஏற்கெனவே திட்டமிட்டதைவிட ஒருவார காலதாமதமாக இந்திய அணி புறப்பட்டுச்செல்லும் என கூறப்பட்டுள்ளது.
நியூஸிலாந்து டெஸ்ட் தொடர் முடிந்தவுடன் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட், 3 ஒருநாள், 4 டி 20 ஆட்டங்களில் விளையாட திட்டமிட்டிருந்தது. இதற்காக வரும் 9-ம் தேதி இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்குக் கிளம்பிச் செல்லும் எனவும் முன்னர் அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையே தென் ஆப்பிரிக் காவில் கரோனாவின் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவல் இருப்பதால் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு செல்லுமா என்பதில் சந்தேகம் ஏற்பட்டது.
இந்நிலையில் பிசிசிஐ-யின் வருடாந்திர பொதுக்கூட்டம் கொல்கத்தாவில் நேற்று நடைபெற்றது. இதில் தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணம் உறுதி செய்யப்பட்டது. அதேவேளையில் ஒருவாரம் தாமதமாக இந்திய அணி புறப்பட்டுச்செல்லும் என அறிவிக்கப்பட் டுள்ளது. மேலும் டி 20 தொடர் பின்னர் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் தொடர் 17-ம் தேதிக்கு பதிலாக 26-ம் தேதி தொடங்க உள்ளது. போட்டி தொடர்பான முழு அட்டவணையும் அடுத்த 48 மணி நேரத்திற்குள் தெரிவிக்கப்படும் என இருநாட்டு கிரிக்கெட் வாரியங்களும் கூட்டாக அறிவித்துள்ளன.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago